Monday 4 March 2013

பகல் கனவு அறிவீரோ!



அள்ளி அருகணைத்து அன்பாய்
            அமுதூட்டி அகம் மகிழ
பள்ளிக்கு விட்டால் பணம்
            பண்ணுவது யார் என 
துள்ளித் திரியும் எம்
            துடுக்கு அடங்க நிதம்
கள்ளிக் காட்டிடையும்
            கரிசை மேட்டிடையும்
சுள்ளென்று எரிக்கும்
            உச்சி வேளை வெய்யிலும்
கொள்ளிக் கட்டை வெட்டி
            கட்டிச் சுமந்திடினும்
கிள்ளித் தருவார் இன்றி
            குடிசையில் வாழும் எம்
பள்ளிப் பருவ வயதின்
            பகல் கனவு அறிவீரோ!
எள்ளிச் சிரித்திட்டோம்
           ஏழ்மையோர் நீவீர் என்றே!
                                                         - சிட்டு எழுதும் சீட்டு 53
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment