Friday 8 March 2013

அடிசில் 48


மசாலா உப்புமா
                                      - நீரா -



















தேவையான பொருட்கள்:
ரவை  - 1 கப்
சிறிதாக வெட்டிய உருளைக்கிழங்கு  - 1 மே.கரண்டி
சிறிதாக வெட்டிய கரட் - 1 மே.கரண்டி
சிறிதாக வெட்டிய பீன்ஸ்  - 1 மே. கரண்டி
சிறிதாக வெட்டிய வெங்காயம் - 1 மே.கரண்டி
சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் - 1 தே. கரண்டி
குறுணலாக வெட்டிய இஞ்சி - ½ தே.கரண்டி
கடலைப்பருப்பு - 1 தே.கரண்டி 
கடுகு - 1 தேக்கரண்டி  
செத்தல் மிளகாய் - 2
மிளகாய்தூள் - ½ தே. கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை  - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 மே. கரண்டி

செய்முறை:
1.  ரவையை அதன் நிறம்மாறாமல் வறுத்து எடுக்கவும்.
2.  அடிப்பக்கம் தடிப்பான வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்குக.
3.  எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு அது வெடிக்கும்போது, கடலைப்பருப்பு, செத்தல்மிளகாய், பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை இட்டு தாளிக்கவும்.
4.  வெங்காயம் பொன்னிறமாக வரும்பொது அதற்குள் வெட்டிய காய்கறிகளையும் இஞ்சியையும் போட்டு வதக்கவும்.
5.  அவை வதங்கியதும் உப்பு, மிளகாய்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி இரண்டரைக் கப் வெந்நீர் விட்டு கொதிக்கவிடவும்.
6.  காய்கறி வெந்ததும் வறுத்து வைத்துள்ள ரவையை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து விரைவாகக் கிளறி, ரவை வெந்து இறுகி வரும் பொழுது இறக்கவும்.

குறிப்பு:
காய்கறிகளோடு இறால், நண்டுச்சதை சேர்த்தும் மசாலா உப்புமா செய்யலாம். 

No comments:

Post a Comment