Artwork - Deepi Sivasanthiran
முருகா முருகா முருகா
பருகா இன்பம் தருவாய்
அருகா இருந்த ணைத்தே
அருமறை ஓதி அருள்வாய்
செங்கயல் துள்ளும் வயற்பதிவிட்டு
செவ்வடி நோவ வருவாய்
அங்கயற் கண்ணி மடியினைவிட்டு
ஆனந்த மயிலில் வருவாய்
பங்கயற் செழும் பாதமேதொட்டு
பணிவோரை நாடி வருவாய்
மங்கையர் மகிழ மனதினைத்தொட்டு
மருளது நீக்கி யருள்வாய்
இனிதே,
தமிழரசி.
அருமை. முருகன் அருள் துணை வரட்டும் என்றும்
ReplyDeleteமகிழ்ச்சி.
Delete