Wednesday, 2 June 2021

உயிரனைத்தும் சுகமேவாழ அருள்வாயே!

வெற்றித் திருவே வருவாயே

  வேண்டிய யாவும் தருவாயே

பற்றிப் பிடிக்கும் நோய்களெலாம்

  பற்றா தழித்து ஒழிப்பாயே

வற்றா நதியாம் நின்கருணை

  வெள்ளத் திருத்தி வைப்பாயே

சுற்றும் உலகின் உயிரனைத்தும்

  சுகமே வாழ அருள்வாயே

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment