Sunday, 15 November 2020

வேண்டிய யாவும் நுகர்ந்திடெடா!

Photo: FB, Chandran

கண்கள் காட்டும் கனிவு கண்டே

காதல் நெஞ்சம் கரையுதெடா

எண்ணம் எதிலும் ஏக்க மில்லை

ஏழ்மை யுனைப் பார்தோடுமெடா

தண்ணென் றணைத்த நாய் அதுவும்

தாயாய் அன்பைப் பொழியுமெடா

விண்ணைத் தொட்ட புகழை எய்தி

வேண்டிய யாவும் நுகர்ந்திடெடா

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment