கல்வி கற்கும் பருவமதில்
கற்கள் சுமக்கச் சொன்னவர் யார்
கல்லில் ஈரம் கசிந்திடினும்
கசியா நெஞ்சக் கயவர் தாமோ!
செல்வி நின்றன் செவ்விதழில்
சிரிப்பை மறக்கச் செய்தவர் யார்
சொல்லில் கனிவு சற்றுமில்லா
சக்கை மனத்து சளக்கர் தாமோ!
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
சொல்விளக்கம்
சளக்கர் - வஞ்சனையுடையோர்
No comments:
Post a Comment