Tuesday 13 April 2021

சித்திரை நங்கை வருகின்றாள்

சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்து!



 பல்லவி

சித்திரை நங்கை வருகின்றாள்

செந்தமிழ் அன்னை சிரிக்கின்றாள்

- சித்திரை நங்கை

அனுபல்லவி

இத்தரை வாழ் உயிரனைத்தும்

இன்புறக் கண்டு களிப்பதற்கே

- சித்திரை நங்கை  

                               சரணம்

வான்மழை பொழிந்திட வையகம் மகிழ்ந்திட

பொன்னணி பொலிந்திட பூக்களும் பூத்திட

மானினம் தாவிட மயிலினம் ஆடிட

நன்மைகள் நிறைந்திட நற்றவம் ஓங்கிட

தேன்றமிழ் கீதம் தெருவெங்குங் கேட்டிட

அன்பெனும் ஊற்றது அனைத்தையும் காத்திட  

- சித்திரை நங்கை

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment