Thursday 31 December 2020

நயப்பொடு வந்திடு நல் ஆண்டே!


இன்பமே சூழ்ந்திடும் இளங்காலை நேரம்

இதயமே மீட்டிடும் இயற்கையின் நாதம்

அன்புமே இணைத்திடும் அனைத்துயிர்ச் சாரம்

அறிவினில் ஓங்கிடும் அற்புதப் போதம்

பண்புமே பழகிடும் பாசத்தின் தீரம்

பணிவினில் உதித்திடும் பரிவொடு நேசம்

நண்புமே நவின்றிடும் நற்றமிற் சீலம்

நயப்பொடு வந்திடு நல் ஆண்டே

இனிதே,

தமிழரசி.

4 comments:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அனைவருக்கும் மங்கலப் புத்தாண்டு வாழ்த்து!

      Delete
  2. தங்களுக்கும், இணைய நண்பர்களுக்கும் மற்றும் அனைத்துலக மக்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி! வாழிய நலமே!

      Delete