Wednesday 10 June 2015

எனைக் கொஞ்சம் பாரீரே!


பட்டமரம் பட்டையற்றுப் போன மரம் என்று
பாரில் உள்ளோர் எனைப் பார்த்து சிரிக்கின்றார்
நெட்டமரம் ஆகவன்று நின்ற மரம் என்று
நகைத்தோரே எனைப் பார்த்து சிரிக்கின்றார் 

எட்டநின்று நகைப்போரே எனைக் கொஞ்சம் பாரீரே
எந்தன்கிளை எங்கனும் எத்தனை பொந்துண்டு
வெட்டவெளி ஆயினும் அத்தனை பொந்திலும்
வண்ணப் பறவை இனம் வாழுவ தறியீரோ!
                                                                  - சிட்டு எழுதும் சீட்டு 103

2 comments:

  1. கற்பனை வரிகள் மரபின் தமிழ்ச்சுவையோடு.........!

    அருமை.

    ReplyDelete