Thursday, 27 February 2025

இன்ப அன்பே உலகாள்தல் அறிவோம்



அன்பே தளையாய் தழைத்து உலகாளும்
            அந்நாள் எப்போ வருமென்றே
என்பே உருக நினைத் திருந்தோர்
            எண்ணில் அடங்கார் இவ்வையத்தே
முன்பே வாடியபயிர் மழை பொழிய
            முளைத்து எழுந்து மொட்டவிழ
இன்பே இயற்கை ஈவது கண்டே
           இன்ப அன்பே உலகாள்தல் அறிவோம்.
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
தளையாய் - பயிராய்
தழைத்து - செழித்து
வாடியபயிர் - மழை இல்லாது வாடிய பயிர்
மொட்டவிழ - மொட்டு விரிய
இன்பே - இன்பத்தையே
இயற்கை - உலகத்தை வழி நடத்தும் இயற்கை
ஈவது - கொடுப்பது
கண்டே - பார்த்து
இன்ப அன்பே - இன்பத்தைத் தரும் அன்பே
உலகாள்தல் - உலகத்தை ஆள்தல்

No comments:

Post a Comment