Tuesday, 31 December 2019

வாராய்! புத்தாண்டே! வாராய்!!



கீற்றென மின்னல் மின்னிட
கொட்டியே மேகம் முழங்கிட
ஆற்றினில் அருவி பாய்ந்திட
ஆனந்த வெள்ளம் தவழ்ந்திட
காற்றினில் கீதம் பரவிட
கானகம் மெல்ல விழித்திட
போற்றியே உயிர்கள் களித்திட
பொன்னும் மணியும் பொலிந்திட
நாற்றிசை எங்கும் புகழ்ந்திட
நன்றாய் நம்மவர் வாழ்ந்திட
வெற்றியே என்றும் சூழ்ந்திட
வாராய்! புத்தாண்டே! வாராய்!
இனிதே!
தமிழரசி.

2 comments:

  1. இனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete