Saturday 15 October 2016

முன்னின்று தடுப்பதேன்


விந்தையென் மனதில் நீயிருக்க
           வியனுலகில் தேடிடும் என்றன்
கந்தைமனக் கசடு அறுத்து
          காத்திருந்து அருளும் கந்த
சிந்தையுள் சிறை வைத்துனை
          சிக்கெனப் பிடித்து உணரா
முந்தையென் வினையெலாங் கூடி
          முன்னின்று தடுப்ப தேன்
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
விந்தை - அற்புதம்
வியனுலகில் - அகன்ற உலகில்
கந்தைமன - பல இடங்களில் கிழிந்து நைந்து தைத்து கந்தையான மன
கசடு - அழுக்கு
அறுத்து - நீக்கி
கந்த - கந்தனே
சிந்தையுள் - சிந்தனையுள்
சிக்கெனெ - சிக்குப்போல தடம் வைத்து/விரைவு
உணரா - உணர்ந்து அறியாத
முந்தை - முற்பிறவி
வினை - செயல்

No comments:

Post a Comment