Tuesday 6 September 2016

பாலகரைக் காப்போமோ!


கல்வியே கருந்தனமோ கற்பதே வாழ்வியலோ
சொல்லிய சொல்லின் சொன்னவர் பிழையெதுவோ
மெல்லிய உள்ளமிலார் மேதினியில் வாழ்வதனால்
கல்லையே நிதம்சுமந்து கைகளும் காய்த்து
கல்லிடைக் கல்லதுவாய் கற்பதே வாழ்வாகிச்
சல்லியை அள்ளிடினும் சல்லியைக் காணாது
புல்லிடைச் சிந்திய புதுமலரின் தேன்போல
பொல்லுகிற வாழ்க்கை பாலகரைக் காப்போமோ!
                                                                                 - சிட்டு எழுதும் சீட்டு 124

சொல்விளக்கம்:
கருந்தனம் - பெருஞ்செல்வம்
மேதினி - உலகம்/பூமி
சல்லி - சல்லிக்கல்/சல்லிக்காசு
பொல்லுகிற - பதராகும்

1 comment:

  1. பாலகரைக் காப்போமாவா?
    பாலகரை மீட்டு
    கல்வி ஊட்ட வேண்டுமே!

    ReplyDelete