திறலீனும் திண்மையால் தீரா வினை தீர்த்து
திறல்விழி திறந்தே திருவருள் செய்து
மறலிவரும் போதும் எம் மனத்திடை இவர்ந்து
மாயையுள் ஆழ்த்தி மமதையை நீக்கி
விறலீனும் வேண்டாமை எனும் செருக் ககற்றி
வாரானெறி நல்கு வண்ணமயில் வாகனா
பெறலரும் பிறவிதந்து பெருமையுடன் காத்தெமை
பேணுநீ எம் பிறவிதொறும் பெற்றதேதையா
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
திறலீனும் - வெற்றியைக் கொடுக்கும்
திண்மையால் - உறுதியால்
திறல்விழி - ஒளிபொருந்திய விழி
மறலி - காலன்/எமன்
இவர்ந்து - நிறைந்து
மாயையுள் ஆழ்த்தி - நாம் அறியாவண்ணம்/பொய்த்தோற்றம்
மமதை - தன்னைவிடச் சிறந்தவர் இல்லை என நினைந்து பிறரை தாழ்த்தி எடை போடுதல்
விறல் - பெருமை
வேண்டாமை - ஆசையற்ற தன்மை
செருக்கு - அழகு, கல்வி, செல்வம், சிறந்த வேலை போன்றவற்றால் வரும் தலைக்கனம்.
வாரானெறி - மீண்டும் பிறவாத வழி
வண்ணமயில் வாகனா - முருகனே
நல்கு - கொடுக்கும்
பெறலரும் - பெறமுடியாத
பிறவிதந்து - பிறப்பைத் தந்து
பேணும் - போற்றி வைத்திருத்தல்
எம் பிறவிதொறும் - எமது பிறவிகளால்
பெற்றதேதையா - எதைப் பெற்றாய் ஐயனே!

No comments:
Post a Comment