Saturday, 8 November 2025

எம் நிதியே! நானில்லா நேரத்தில் எங்குற்றாய்!


என் தந்தை பண்டிதர் மு ஆறுமுகன் அவர்களின் தம்பி, அமரத்துவம் அடைந்த முத்துக்குமாரு பாலசுந்தரம், புனிதவதி பாலசுந்தரம் ஆகியோரின் அருமை மகளும் திரு சிவச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும் எனது ஆருயிர்த் தங்கையுமான சிவகலாநிதி சிவச்சந்திரன் அவர்கள் 03/11/2025 திங்கட்கிழமை நயினை நாகபூசணி அம்மன் திருவடித் தாமரைத் தேனுடன் கலந்தார். அப்போது நான் நம் நாட்டிற்குச் சென்றிருந்ததால் அந்நிகழ்வு எனக்கு பேரதிர்ச்சியைத் தந்தது. என்னைதமிழ்’, ‘தமிழ் அக்காஎன்றெல்லாம் அழைத்துக் கொஞ்சி மகிழ்ந்த அவரது உடலைப்பார்க்கப் போகிறேன். தாய்த் தாய் தேடிச் செல்லும் இவ்வுலகின் மாறாத சட்டம் இது. எனினும் மாபெரும் வெற்றிடமே என்னுள் எஞ்சி நிற்கிறது. நயிணை நாகபூசணிக்கு எம் குடும்பத்துநிதிஉடனே தேவைப்பட்டதோ! வைப்பில் இட்டாளோ!! எங்கே தேடுவேனோ!!!

இனிதே,

தமிழரசி.




No comments:

Post a Comment