வெள்ளத்துள் நாம் ஆடலாகுமோ
கள்ளத்துள் கரந்தாடக் கற்றனையோ
கள்ளத்துள் நாமாடிக் களிப்பதென்னே
பள்ளத்துள் பாய்ந்தாடும் பரமனே படு
பள்ளத்துள் நாமாடக் கூடுமோ
உள்ளத்துள் உவந்தாடும் பாதனே உன்
உள்ளத்துள் நாமாடல் ஒன்னுமோ
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
கள்ளத்துள் - வஞ்சனையாக
கரந்தாடக் - மறைந்தாடக்
கள்ளத்துள் நாமாடி - பொய்யாக நாமாடி
களிப்பதென்னே - மகிழ்வது என்னவோ?
பள்ளத்துள் -தாழ்ந்த நிலத்தில்
படு பள்ளம் - மிகமிக ஆழமான குழியில்
நாமாடக் கூடுமோ - நாம் ஆட முடியுமா?
உள்ளத்துள் - மனத்துள்
உவந்து - மனம் மிக மகிழ்ந்து
பாதனே - பாதத்தையுடையவனே
உன் உள்ளத்துள் - உனது நெஞ்சத்துள்
ஒன்னுமோ - உறுதியாய் நிகழுமோ?
குறிப்பு
காட்டாற்று வெள்ளமாய் கல்லும் மலையும் குதித்து படு பாதாளத்தில் பாய்ந்து வீழ்ந்தோடி கட்டிடங்களைத் தகர்த்து உயிர்களைக் கொன்று குவித்த இயற்கையின் சீற்றத்தை பார்த்த தாக்கத்தால் எழுந்த பாடல்.

No comments:
Post a Comment