Thursday, 30 January 2025

மறப்பதேனோ!


பாவியெனப் பிறந்துவிட்டால்
          பார்த்தணைக்க யாருமின்றி
ஆவிபோகும் நேரம்வரை
          அந்தரத்தே ஆடும்வாழ்வை
தேவிநினைச் சரணடைந்து
          தேறுதற்கு எண்ணிநிதம்
கூவியுனை அழைத்திடினும்
           குறைகளைய மறப்பதேனோ!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment