Tuesday, 21 January 2025

வற்றல் மரங்கள் உணவு தந்திடுமோ?


மரங்கள் தாமேதம் உணவையாக்கி பிற
            மன்னுயிர் மகிழ்ந்துவாழ தமைக் கொடுக்கும்
மரமே மண்ணுயிர் அனைத்தின் உயிர்நாதம்
            மறவாதவை தரும் காற்றே உயிர்மூச்சு
மரங்கள் மண்ணில் இல்லையெனில் வான்
            மழையும் இங்கு பொழியாது வற்றல்
மரங்கள் உணவு தந்திடுமோ உயிர் மூச்சின்றி
            மானுடம் மெல்ல மடங்கிடலாமோ சொல்!
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
"மரம் வளர்த்து மன்னுயிர் காப்போம்"

No comments:

Post a Comment