Tuesday 5 December 2023

நல்லருள் தாரும் அம்மா!


கயிலைப் பதிவாழ் கயிலாய நாதன்

  கால் பிடித்த நாயகியே

மயிலைப் பதிவாழ் நங்கை என்பை

  மங்கை யாக்கிய மாதரசே

அயிலைப் பதிவாழ் அசுரர் உடலம்

  அழிக்க வேல்கொடுத்த அன்னையே

நயினைப் பதிவாழ் நாகேஸ்வரியே

  நல்லருள் தாரும் அம்மா

இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்:

கயிலாயனாதன் - சிவன்

மயிலை - மயிலாப்பூர்

நங்கை என்பை - பூம்பாவையின் எலும்பை

அயிலை - திருச்செந்தூர்

உடலம் - உடம்பு

வேல்கொடுத்த - முருகனுக்கு சக்திவேல் கொடுத்த

நயினை - நயினாதீவு

No comments:

Post a Comment