Thursday 14 December 2023

பசியும் மெல்ல பறந்தோடும்

புங்குடுதீவு - திகழி

மனமோடு கதைபேசு மௌனங்கள் உனதாகும்

  மணித்துளி நேரம் உன்றன்

இனமோடு கதைபேசு இன்பங்கள் வசமாகும்

  இயற்கையின் அரும்பாய் மிளிர்

வனமோடு கதைபேசு விலங்குகள் உறவாகும்

  வெயிலை வேர் அறுக்கும்

பனையோடு கதைபேசு பல்லுயிர்கள் வாழ்த்தும்

  பசியும் மெல்ல பறந்தோடும்


இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment