Thursday 9 June 2022

தமிழர் நான்மறையைச் சொல்வாயோ!

 


கல்லால நீழலிலே கனிந்துரைத்த

அறமெதுவோ

சொல்லாழம் கண்டு சொன்னநற்

பொருளெதுவோ

இல்லாழ இன்பத்தில் இனிதுரைத்த

இன்பமெதுவோ

விள்ளாழ வினைகள கற்றித்தரு

வீடெதுவோ

நல்லார்க்கு நான்மறை நவின்றசெந்

நாவதனாற்

சொல்லாயோ தமிழர் நான்மறையைச்

சொல்லாயோ!

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment