Sunday 5 June 2022

புங்குடுதீவில் பொன்னென மின்னும் புங்கைமரம்

 பொன்னிறப் புங்கை

பொன்போலும் இலையுடை பொன்னிறப் புங்கையே

  புங்கையம் பதிதன்னில் பொன்னென மின்னுவாய்

கன்னலும் செந்நெல்லும் கழனியும் சூழ்தர

  காட்டையும் மேட்டையும் அழகுறச் செய்குவாய்

முன்போலும் மாந்தர்தம் பொன்மேனி தன்னையே

  மன்னிய நலமுட னென்றும் வாழவைப்பாய்

நின்போலும் கவினிய நெஞ்சராய் வாழுநர்

  நிறைந்த புன்னகை பூத்திட நிற்பாய்

இனிதே

தமிழரசி.


குறிப்பு:

சொல் விளக்கம்

கன்னல் - கரும்பு

மன்னிய நலம் - பொருந்திய நலம்

கவினிய நெஞ்சராய் - அழகு பெற்ற மனத்துடன்

வாழுநர் - வாழ்வோர்

No comments:

Post a Comment