Saturday 29 December 2012

அடிசில் 39


பலாப்பழப் பாயாசம்
                                                               - நீரா -


















தேவையான பொருட்கள்:
குறுணலாக வெட்டிய பலாப்பழச்சுளை  -  1½ கப்
சேமியா  -  ½ கப்
சீனி  -  ¾ கப்
பால்  -  3 கப்
நீர்  -  ½ கப்
நெய்  -  ½ மே.கரண்டி
குறுணலாக வெட்டிய முந்திரிப்பருப்பு  -  ½ மே.கரண்டி
ஏலத்தூள்  -  1சிட்டிகை
உப்பு  -  ½ சிட்டிகை 

செய்முறை:
  1. பாத்திரத்தில் நெய்யைவிட்டு சூடாக்கி, முந்திரிப்பருப்பை பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
  2. அந்த நெய்யில் சேமியாவை பொன்னிறமாகப் பொரித்து அதனுள் பாலையும் நீரையும் சேர்த்து அடிக்கடி கிளறி வேகவிடவும்.
  3. சேமியா சிறிது வெந்ததும் பலாப்பழச்சுளைகளைப் போட்டு காய்ச்சவும்.
  4. சீனியைச் சேர்த்துக் காய்ச்சி பால் தடித்து வரும்பொழுது முந்திரிப்பருப்பு, உப்பு, ஏலத்தூள் சேர்த்து காய்ச்சி இறக்கவும்.

பின்குறிப்பு:
பாலுக்குப் பதிலாக தேங்காய்ப்பால் சேர்க்கலாம். சுவை நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment