Thursday 14 March 2024

பைந்தமிழ் பழரசம்


அழகிய பழமுதிர் அருஞ்சோலையங் காட்டில்

  அருவிநீர் ஆடி ஆனந்த மயிலென

இழகிய மனமும் இளமையின் வேகமும்

  இசைந்திட வந்தே இணையடி தொழுதேன்

பழகிய தமிழ்ச்சொல் பயின்றிடும் வேளையில்

  பைந்தமிழ் பழரசம் பரிவுடன் தந்தாய்

குழகனே குமரனே கூவியே அழைத்தேன்

  குன்றுதோ ராடிடும் குரைகழல் காட்டு

இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்:

அருஞ்சோலை - எல்லாவளமும் நிறைந்த அரிய சோலை

இசைந்திட - ஒன்றாய்ச் சேர்ந்திட

இணையடி - திருவடி இரண்டையும் ஒன்றாய்

பயின்றிடும் - கற்றிடும்

வேளையில் - நேரத்தில்

பைந்தமிழ் பழரசம் - பைந்தமிழ்ச் சாறு

பரிவுடன் - இரக்கத்துடன்

குழகனே - முருகனே

குமரனே - இளமையானவனே

கூவியே - நெடுந்தூரம் கேட்க சத்தமிடல்

குன்றுதோராடிடும் - மலைகளில் ஆடும்

குரைகழல் - மணிகள் ஒலிக்கும் திருவடி

No comments:

Post a Comment