இன்பத்தமிழே எம் இதயத்து வாழ்வே
பன்னெடுங் காலம் பழமையாய் போயுமே
கன்னியாய்த் திகழும் கவின் அழகாலே
மன்னிய காதலில் மயங்கி நின்றோமே
உருகிடும் உணர்வினில் ஊறிடும் தமிழை
பருகிடும் ஆசையால் பாடியும் ஆடியும்
பெருகிடும் இன்பொடு பேணியே பெரிதாய்
தருகுவம் உவந்தே தாரணி தழைக்க
இனிதே,
தமிழரசி.