Saturday, 9 September 2023

கந்தா உன் கழலடி காட்டாயோ


கந்தா உன் கழலடி காட்டாயோ
        கருணைக் கண் திறந்து சற்றே
மந்தா ரப்புன் னகை யோடு
        மரகதக் குண்டல மசைய
சிந்தா மணி மகுடம் தாழ்த்தி
        சிறியேன் எனைப் பார்த்து
செந்தா மரைக் கரம் நீட்டி
        செய்ய வேல் தன்னால் அணைத்தே
இனிதே,
தமிழரசி.