Sunday, 25 July 2021

உயிரே என்னுள் கரைகின்றாய்


உயிரே என்னுள் கரைகின்றாய்

   உணர்வெனும் இசையை மீட்டுகிறாய்

பயிரே விளையாக் கானலிலும்

   பழந்தமிழ்ப் பயிரைக் காட்டுகிறாய்

தயிரே கடைந்தெழு நெய்யேபோல்

 தரணியெங்கும் நின்சுவடாய் எழில்

எயிரே இலங்க நகைத்திடுநல்

  இளந்தமிழ்த் தாயாய் வாழ்ந்திடுவாய்

இனிதே,

தமிழரசி.

Friday, 16 July 2021

சிரித்து மகிழல் அழகதோ!

 


கந்தம் மேவு கந்தனே

  காத் தருள்வாய் என்னையே

பந்தம் மேவு தன்மையால்

  பரிதவித்து மாளவோ

பந்தம் மேவ வைத்தவன்

  பார்த் திருத்தல் பண்பதோ

சிந்தை மேவு கந்தனே

  சிரித்து மகிழல் அழகதோ!

இனிதே,

தமிழரசி.