Wednesday, 4 April 2012

அடிசில் 20

ஓமப்பொடி

                            - நீரா -

தேவையான பொருட்கள்:
இடித்த ஓமத் தூள்  -  2 தேக்கரண்டி
செத்தல் மிளகாய் தூள்  -  1 தேக்கரண்டி 
பெருங்காயத்தூள்  -  1 சிட்டிகை
அப்பச்சோடா  -  1 சிட்டிகை
கடலை மா  -  2 கப் 
அரிசி மா  -  ½ கப்
 பட்டர்  -  2  தேக்கரண்டி
உப்பு  -  தேவையான அளவு
எண்ணெய்  -  பொரிப்பதற்கு


செய்முறை:
1.  பொரிக்கும் எண்ணெய்யை தவிர்த்து, மற்றப்பொருட்டளை ஒரு பாத்திரத்தில் இட்டு ஒன்றாகக் கலந்து கொள்க.
2.  அக்கலவையில் தண்ணீர் தெளித்து இடியப்ப மாப்போல் குழைத்துக் கொள்க.
3.  வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
4.  ஓமப்பொடி அச்சை முறுக்கு உரலில் போட்டு குழைத்த மாவை இட்டு கொதிக்கும் எண்ணெய்யில் இடியப்பம் போல் பிழிந்து பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
5.  ஆறியதும் காற்றுப் புகாத பாத்திரத்தில் போட்டு மூடிவைத்து சாப்பிடவும்.

No comments:

Post a Comment