ஆனந்தமாய் படித்திடுவோமே
இசைகள் பாடி நாமே
ஈசன் பாதம் தொழுதிடுவோமே
உயர்வை நாடி நாமே
ஊக்கமாக உழைத்திடுவோமே
எழுச்சி யுடன் நாமே
ஏற்றம் காண விரைந்திடுவோமே
ஐயம் நீக்கி நாமே
ஒற்றுமையை வளர்த்திடுவோமே
ஓடி ஆடி நாமே
ஔவை பதம் போற்றி
அஃகமும் காசும் தேடிடுவோமே!
இனிதே,
தமிழரசி
சொல்விளக்கம்:
எழுச்சி - வேகத்துடன் விரைந்து செயற்படல்
ஐயம் - நம்பிக்கை இன்மை
அஃகம் - தானியப் பொருட்கள்
No comments:
Post a Comment