Wednesday, 4 January 2012
ஈழநங்கை எழுந்திரு!
ஈழநங்கை எழுந்திரு! உந்தன்
ஏற்றம் சொல்லுவன் கேட்டிரு!
மேலைநாடு எங்கனும் உந்தன்
மேன்மை தெரிந்து கொண்டனர்
சாலையோரம் தன்னிலும் உந்தன்
சாஸ்திரங்கள் கற்றனர்
வாலைக்குமரி போல நீ
வாழும் வாழ்வு எய்திட
வேளை இன்று வந்தது
விரைந்து நீயும் எழுந்திரு!
சூழ நின்ற பகைவரும்
சோர்ந்து மெல்ல இருந்தனர்
சால நின்றன் வலிமையை
சாடி அறிந்து கொண்டனர்
பெற்றி எல்லாம் பெற்றனை
போர் முகத்து மைந்தரால்
வெற்றி முழக்கம் கேட்குதே
வீறு கொண்டு எழுந்திரு!
ஓலை கொண்டு தூதுவர்
ஓடி அங்கே வருகின்றார்
ஓய்விலாது உழைத்துனை
ஓம்புதற்கே விழைகின்றார்
மைந்தர் எல்லாம் கூடினர்
மகுடம் சூடி வைக்கவே
நைந்து நீயும் தூங்கவோ
நலங்கள் காண எழுந்திரு!
- சிட்டு எழுதும் சீட்டு (15)
[2006ல் எழுதியது]
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment