மாவீரரே! மாவீரரே! உம்மை
அன்னை அழைத்தனளோ! - தமிழ்
அன்னை அழைத்தனளோ!
கன்னலும் செந்நெலுமாய் - மாங்
கனிதூங்கும் சோலையிலே
காவியம் படைத்திட
அன்னை அழைத்தனளோ! - தமிழ்
அன்னை அழைத்தனளோ!
- மாவீரரே!
சின்னமும் பின்னமுமாய் - சிக்கி
சிதறிடும் தமிழினத்தை
சேர்த்திங்கு வைப்பதற்கு
அன்னை அழைத்தனளோ! - தமிழ்
அன்னை அழைத்தனளோ!
- மாவீரரே!
- சிட்டு எழுதும் சீட்டு (11)
- சிட்டு எழுதும் சீட்டு (11)
No comments:
Post a Comment