மீன் அச்சாறு
- நீரா -
முள் நீக்கிய மீன் துண்டுகள் - 500 கிராம்
உள்ளிப்பல்லு (பூண்டு) - 9
இஞ்சி - 2" துண்டு
செத்தல்மிளக்காய் - 5
வினிகர் - 1 கப்
கடுகு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக் கரண்டி
உப்பு தேவையான அளவு
செய்முறை:
1- ஈரமற்ற மீன் துண்டுகளில் உப்பு, மஞ்சள், மிளகாய்த்தூள் போட்டுக்கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
2- ஒரு தேக்கரண்டி கடுகுடன் செத்தல்மிளகாய், இஞ்சி, உள்ளி சேர்த்து வினிகர் விட்டு நருவல் துருவலாக அரைத்துக் கொள்க.
3- ஊறிய மீன் துண்டுகளை கொதித்த எண்ணெய்யில் மெல்லிய பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். (முறுகப் பொரிக்க வேண்டாம்).
4- சூடான எண்ணெய்யில் கறிவேப்பிலையைப் பொரித்து கடுகு, வெந்தயம், பெருஞ்சீரகம் போட்டுத் தாளித்து மிளகுதூளையும் அரைத்த வினிகர் கூட்டையும் சேர்த்து இளஞ்சூட்டில் இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும்.
5- கொதிக்கும் போது பொரித்த மீன் துண்டுகளைப் போட்டு உப்பும் சேர்த்து மிக மெல்லிய நெருப்பில் கூட்டு திரண்டு வரும் போது இறக்கவும்.
குறிப்பு:
விரும்பினால் கறுவாப்பட்டை சேர்க்கலாம்.
No comments:
Post a Comment