Tuesday, 19 March 2013

சிந்துதமிழ் பாடல் தந்தான்


                         பல்லவி
சந்தனத் தேரினில் வந்தே - நல்
சிந்துதமிழ் பாடல் தந்தான்

                அனுபல்லவி
சுந்தர முகத்தினைக் கண்டே - மனம்
சந்ததம் பாட நாணி நின்றேன்

                  சரணம்
சிந்திய முறுவலின் சுழிப்பில் வீழ்ந்தே
கந்தனோ இவன் காமனோ என
சிந்தை தடுமாறி திகைக்க அவன்
வந்தேன் வயலூரன் என நகைத்தான் 
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
சிந்துதமிழ் பாடல்: எடுப்பு, தொடுப்பு, முடிப்பு [பல்லவி, அனுபல்லவி, சரணம்] உடைய பாடல்.
சந்ததம்: துடிப்பு/எப்பொழுதும்.

No comments:

Post a Comment