எதால மச்சி நாவரவோ!
மச்சான்: சுற்றிவர அக்கு வேலி
சூழவர அடப்ப வேலி
எங்கும் ஒரே வேலி
எதால மச்சி நா(ன்) வரவோ!
மச்சாள்: அக்குவேலி மேல படங்கிட்டு
அடப்பவேலி கீழ கிடங்கிட்டு
பக்குவமாய் வாரும் மச்சினரே!
நல்லபாம்பிருக்கு வாசலிலே!
மச்சான்: நல்லபாம்பு படமெடுத்தா வசம்பு
வச்சிருக்கே(ன்) மச்சியரே!
நட்டநடு சாமத்திலே தூங்காது
காத்திருப்பா(ய்) ஊசலிலே!
- நாட்டுப்பாடல் (கிடாப்பிடிச்ச குளம்)
(பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
குறிப்பு:
வசம்பின் மணத்திற்கு பாம்புகள் கிட்ட வருவதில்லை. வசம்பின் மணத்திற்கு பாம்பு கிட்ட வராது என்பதை வன்னி மக்கள் அறிந்திருந்தனர்.
சொல்விளக்கம்:
அக்குவேலி - முள்வேலி
அடப்பவேலி - கிடுகால் மறைத்து அடைத்த வேலி
படங்கு - சாக்கால் ஆனது
ஊசல் - ஊஞ்சல்
No comments:
Post a Comment