பல்லவி
செவ்வடிவேளே வருக சேவடி இன்பம் தருக
எவ்வடிவோடு வரினும் ஏழை எனக்கு அருள்க
- செவ்வடிவேளே வருக
அனுபல்லவி
எவ்வனம் போகுமுன்னே என்னெதிர் வந்து நின்று
ஒவ்வனம் யாவும் போக்கி ஒண்தமிழ் இன்பம் அருள்க
- செவ்வடிவேளே வருக
சரணம்
கௌவைகள் எல்லாம் தொலைய கணத்தினில் இங்கு வருக
கௌணியர் கோனைப் போல கவித்துவம் எனக்குத் தருக
பவ்வியமாக யானும் பாமாலை புனைந்து சூட பிறவி
பௌவம் தன்னைப் போக்கி பதமலர் சூட்டி அருள்க.

இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
சொல்விளக்கம்
1. சேவடி - திருவடி
2. எவ்வனம் - இளமை (எவ்வனம் என்பது வடமொழி சென்று யௌவனம் ஆனது)
3. ஒவ்வனம் - கெட்ட குணம்
4. ஒண்தமிழ் - அழகிய தமிழ்
5. கௌவைகள் - துன்பம்/கலக்கம்
6. கணம் - ஒரு நொடிப் பொழுது
7. கௌணியர் கோன் - திருஞானசம்பந்தர் (மூன்று வயதில் தேவாரம் இயற்றியவர்)
8. கவித்துவம் - கவிதை இயற்றும் திறமை
9. பவ்வியம் - பணிவு
10. பௌவம் - கடல்

No comments:
Post a Comment