வடிவழகில் இலச்சுமியோ
காசினியில் உன்னைப்போல்
கண்டதில்லை கண்மணியே.
- நாட்டுப்பாடல் (வரிக்கூத்தூர்)
ஆண்: வண்ணமலர் சோலையிலே
வாசமுண்டு வீட்டினிலே
சண்பகத்தின் வாசமல்லோ என்
தையலுட மேனியல்லாம்.
- நாட்டுப்பாடல் (மன்னார்)
ஆண்: உண்ணமனம் நாடுதில்லை
உறங்கமனம் கூடுதில்லை
வண்ணமலர் சண்பகமாய்
வாட்டுறாளே என் உசிர.
- நாட்டுப்பாடல் (செட்டிகுளம், வவுனியா)
(பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
No comments:
Post a Comment