Sunday, 9 October 2011

தமிழனின் வழித்தடம்
















முகம்  தெரியா இருட்டிலும்

முந்தையோர் தடம்நாடி
தமிழனின் வழித்தடந் தேடி
தடையற்று தனிவழியே 
நடக்க ஆசைப்பட்டேன்.
நடந்தேன் நாடும்நகரமும்
காடும்மலையும் கடந்தேன்.
கடிநடை தளர்ந்தேன்.
கடுகி மெல்லயிருந்தேன்.
எழுந்தே சற்றுத்திரும்பி
என் தடம் பார்த்தேன்.
என்னே! அதிசயம்!
நான் திரும்பமுன்னே
என்வழித்தடம் யாவும்
அழிக்கப்பட்டு விட்டனவே!
தமிழா! தளராதே!
தடம் அற்றபாதையிலும்
தளராது நடைபோடு.
தண்ணீரின் அடியினிலும்
தடவரையின் இடுக்கினிலும்
முந்தையோர் தரவுகள்
முழுமையாய் அழியாது
வரலாறு சொல்லக் 
காத்துக் கிடக்கின்றன!
                                                   
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment