பெண்: கட்டவெளி காட்டுக்குள்ள
கடுகிவழி போறவரே
காட்டெருமை கத்துதய்யா
கவனமா போய்வாரு(ம்)
ஆண்: கட்டவெளி காட்டுக்குள்ள
கிளையொடிக்கு மச்சியரே
காட்டெருமை வீரரென்னு
கானமயில் சொல்லலையோ
பெண்: காட்டெருமை வீரரென்னு
கானமயில் சொல்லலையே
வீட்டெருமை வாகனத்தார்
வீறுகொண்டு வருவாரா(ம்)
ஆண்: வீட்டெருமை வாகனத்தார்
வீறுகொண்டு வந்தாக்கா
வீரகத்திவாள் எடுத்து
பெண்: வீரகத்திவாள் எடுத்து
விலாப்புடைக்க வெட்டயில
வீடிக்கை பாப்பதற்கு
விரைந்துநானும் வந்திடட்டா?
- நாட்டுப்பாடல் (மாந்தை)
(பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
இனிதே,
தமிழரசி.
- நாட்டுப்பாடல் (மாந்தை)
(பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment