கெண்டன்ஸ் பால் [Condensed Milk]
- நீரா -
தேவையான பொருட்கள்:
பால் - 2 கப்
சீனி - 1 கப்
பட்டர்/நெய் - 1 தே.கரண்டி
அப்பச்சோடா - 1 சிட்டிகை
செய்முறை:
1. அடிப்பக்கம் தடிப்பான வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி சீனியை இட்டு நன்கு கரைத்துக் கொள்க.
2. அந்தப் பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஆகக் குறைந்த இளஞ்சூட்டில் காய்ச்சவும். பால் அடிப்பிடியாதும் பொங்கி வழியாதும் பார்த்துக் கொள்க.
3. பதினைந்து நிமிடத்தின் பின்னர் பட்டர் சேர்த்துக் 2 - 3 நிமிடம் காய்ச்சவும்.
4. பால் தடித்து நிறம் மாறி 2 கப் பால் வற்றி, 1 கப் பால் அளவு வரும் போது இறக்கவும்.
5. அதற்குள் அப்பச்சோடாவைப் இட்டு நன்கு கலந்து கொள்க.
6. ஆறியதும் காற்றுப் போகமுடியாத போத்தலில் ஊற்றிவைத்துப் பயன்படுத்தலாம். குளிரான இடத்தில் இரண்டு கிழமைக்கு மேல் இருக்கும்.
No comments:
Post a Comment