சிக்கின் 65
- நீரா -
தேவையான பொருட்கள்:
கோழி - 300 கிராம்
கட்டித்தயிர் - 150 கிராம்
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி
வினிகர் - 2 தேக்கரண்டி
அரைத்த உள்ளி - தேக்கரண்டி
அரைத்த இஞ்சி - தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு - 3 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. மெல்லியதாக வெட்டிய கோழி இறைச்சியை எலுமிச்சம் சாற்றில் புரட்டி, 2 நிமிடம் ஊறவிடவும்.
2. அதனுள் எண்ணெய் தவிர்ந்த மற்றவற்றை இட்டு நன்றாகக் கலந்து 2 - 3 மணிநேரம் ஊறவிடவும்.
3. பின்னர் சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு:
1965ம் ஆண்டு சென்னை ‘புகாரி ஹோட்டலில்’ அறிமுகம் செய்து வைக்கப்பட்ட கோழிப்பொரியலின் பெயரே சிக்கின் 65.
No comments:
Post a Comment