தாமரைவிதை அல்வா
- நீரா -
கோது இல்லாத தாமரை விதை - 300
சீனி - 200 கிராம்
பட்டர் - 125 கிராம்
முந்திரிப் பருப்பு - 50 கிராம்
தண்ணீர் - 200 மி. லீற்றர்
எலக்காய் தூள் - 1 சிட்டிகை
உப்பு - சிட்டிகை
செய்முறை:
- தாமரைவிதையை 4 மணி நேரம் ஊறவிட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரைச் சூடாக்கி சீனி, ஏலத்தூள் சேர்த்து, கையில் ஒட்டும் பதத்தில் பாணியாகக் காய்ச்சிக் கொள்க.
- வாயகன்ற பாத்திரத்தில் பட்டரை உருக்கி முந்திரிப்பருப்பை பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.
- அந்த பட்டரினுள் அரைத்த விழுதைப் போட்டு இளம் சூட்டில் கிளறவும்.
- நெய் பிரிந்து வரும் பொழுது சீனிப்பாணி, உப்பு, பொரித்த முந்திரிப்பருப்பு சேர்த்துக் கிண்டவும்.
- எல்லாம் ஒன்றாக கரண்டியுடன் திரண்டு வரும் போது இறக்கி நெய்பூசிய தட்டில் கொட்டி, பரப்பி விரும்பிய வடிவில் துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.
குறிப்பு:
தாமரைவிதை வயது போவதால் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி இளமையாகத் தோன்றச் செய்யும்.
கருவுற்றிருக்கும் போது தாமரைவிதை உண்பதைத் தவிர்க்கவும்.
No comments:
Post a Comment