துணையாளின் எண்ணத்தை
துடைத்தெறிய மனமின்றி
குறிப்போடு கூடுகட்டி
குடியிருக்க
துடிக்கின்ற
தூக்கணாங்குருவியே!
துணை கூடும் முன்னே
வீடுகட்டும் தொழில் நுட்பத்தை
யாரிடம் கற்றாய்?
அதுவும் தலைகீழாய்த் தொங்கியும்
அந்தரத்தே நின்றும் பறந்தும்
தளம் அமைத்து
தளம் பிரித்து
மின்மினியின்
மின்சார விளக்கு பதிக்க
எங்கு கற்றாய்?
- சிட்டு எழுதும் சீட்டு - 24
- சிட்டு எழுதும் சீட்டு - 24
No comments:
Post a Comment