Saturday, 10 March 2012

தொழில் நுட்பம்


துணையாளின் எண்ணத்தை
துடைத்தெறிய மனமின்றி
குறிப்போடு கூடுகட்டி 
குடியிருக்க துடிக்கின்ற 
தூக்கணாங்குருவியே!
துணை கூடும் முன்னே
தொங்கும் கூடுகட்டும் 
தொழில் நுட்பத்தை 
யாரிடம் கற்றாய்?
அதுவும் தலைகீழாய்
அந்தரத்தே தொங்கியும்
நின்றும் பறந்தும்
தளமமைத்து தளம்பிரித்து
மின்மினியின் மின்சாரவிளக்கு 
பதிக்க எங்குகற்றாய்?
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment