உள்ளமே கோயில் கொண்டாய்
உணர்வினில் ஒன்றி நின்றாய்
துள்ளுமனத் துயர் துடைத்தாய்
துவர்ப்பின்றி உவப்புத் தந்தாய்
விள்ளும் வினைவேர் அறுத்தாய்
வள்ளளாய் வயலூ ரமர்ந்தாய்
தெள்ளுதமிழ் பாடல் நயப்பாய்
தெண்டன் இட்டேன் உனையே
இனிதே
தமிழரசி.
சொல்விளக்கம்:
ஒன்றி - சேர்ந்து
துள்ளுமனம் - துடிக்கும் மனம்
துவர்ப்பு - துவர்ப்புச் சுவை
உவப்பு - மகிழ்வு
விள்ளும் வினை - கூறுபாடு செய்யும் வினை
வள்ளளாய் - கொடை வள்ளளாய்
அறுத்தாய் - வெட்டினாய்
தெள்ளுதமிழ் - தூய தமிழ்
நயப்பாய் - விரும்புவாய்
தெண்டன் இட்டேன் - வணங்கினேன்
No comments:
Post a Comment