Thursday, 8 February 2024

தெள்ளுதமிழ் பாடல் நயப்பாய்!


உள்ளமே கோயில் கொண்டாய்

  உணர்வினில் ஒன்றி நின்றாய்

துள்ளுமனத் துயர் துடைத்தாய்

  துவர்ப்பின்றி உவப்புத் தந்தாய்

விள்ளும் வினைவேர் அறுத்தாய்

  வள்ளளாய் வயலூ ரமர்ந்தாய்

தெள்ளுதமிழ் பாடல் நயப்பாய்

  தெண்டன் இட்டேன் உனையே

இனிதே

தமிழரசி.


சொல்விளக்கம்:

ஒன்றி - சேர்ந்து

துள்ளுமனம் - துடிக்கும் மனம்

துவர்ப்பு - துவர்ப்புச் சுவை

உவப்பு - மகிழ்வு

விள்ளும் வினை - கூறுபாடு செய்யும் வினை

வள்ளளாய் - கொடை வள்ளளாய்

அறுத்தாய் - வெட்டினாய்

தெள்ளுதமிழ் - தூய தமிழ்

நயப்பாய் - விரும்புவாய்

தெண்டன் இட்டேன் - வணங்கினேன்

No comments:

Post a Comment