Saturday, 3 February 2024

ஆனந்த வெள்ள திருவே!


ஓங்காரப் பொருளே நீ
           ஓதுமனத் துள்ளாய் நீ
பாங்காகக் காப்பாய் நீ
           பாழ்வினை அறுப்பாய் நீ
ஏங்காமனந் தந்தாய் நீ
           ஏழையர்க் கருள்வாய் நீ
ஆங்காரம் அழிப்பாய் நீ
           ஆனந்த வெள்ள திருவே!
இனிதே,
தமிழரசி. 

சொல்விளக்கம்:
ஓங்காரம் - பிரணவம்
ஓதுமனம் - நினைக்கும் மனம்
பாங்காக - இயல்பாக
பாழ்வினை - ஊழ்வினை
ஏங்காமனம் - இல்லையெனக் கவலைப்படாத மனம்
ஆங்காரம் - செருக்கு
திரு - திருமகள்

No comments:

Post a Comment