நோறாத நோன்மை உடையார் தம்
நினைவில் நிலைக்கும் நற்குணனே!
ஆறாத துன்பம் உறினும் நிதம்
ஓயாது உனை உன்ன அருள்வாய்!
நீறாக நீரோடு கலந்து நீள்
நிலனோடு உறவாடும் போதும்
மாறாத சிந்தை தருவாய் என்
மனமன்றினுள் ஆடி அருள்வாய்!
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
நோறாத - தவம் செய்யாத
நோன்மை - வலிமை
நோறாத நோன்மை - தவம் செய்யாது கிடைத்த தவவலிமை
ஆறாத - தீராத
உறினும் - அடைந்தாலும்
ஓயாது - எப்போதும்
உன்ன - நினைக்க
நீறாக - சாம்பலாக
நிலன் - நிலம்
மாறாத சிந்தை - கடவுள் சிந்தனையிலிருந்து மாறாமல்
No comments:
Post a Comment