இறால் பகோடா
- நீரா -
தேவையானவை:
சுத்தம் செய்த இறால் - 150 கிராம்
கடலைப் பருப்பு - 250 கிராம்
கடலை மா - 50 கிராம்
வெள்ளை அரிசி மா - 50 கிராம்
வெட்டிய பச்சை மிளகாய் - 6 - 7
வெட்டிய வெங்காயம் - 2 மே.கரண்டி
வெட்டிய இஞ்சி - 2 தே.கரண்டி
வெட்டிய கறிவேப்பிலை - கொஞ்சம்
சீரகம் - 1 தே.கரண்டி
மிளகுப் பொடி - 1 தே.கரண்டி
செத்தல் மிளகாய்ப் பொடி - 2 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
- கடலைப்பருப்பை கழுவி அரைமணி நேரம் ஊறவிட்டு வடித்து அரைப்பதமாக அரைக்கவும்.
- இறால் பெரிதாக இருந்தால் சிறிது சிறிதாக வெட்டவும்.
- ஒருபாத்திரத்தில் அரைத்த கடலைப்பருப்பு, இறாலுடன் எண்ணெய்யைத் தவிர்த்து மற்றப் பொருட்களைச் சேர்த்து இறுக்கமாக உதிர்ந்து விழும் பதத்தில் நீர் தெளித்துக் குழைத்துக் கொள்க.
- இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும்.
- எண்ணெய் கொதித்ததும் அதனுள் குழைத்த கலவையை பகோடாபோல் உதிர்த்தி போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
No comments:
Post a Comment