நெஞ்சம் தஞ்சம் தஞ்சமென் றரற்ற
உனைவிழைந்தே ஐய மேதுமின்றி நினைநாடி
உவந்து வந்தே உவகை கொண்டே
எனையிழந்தே உனை அடைந் தேன்
என் கண்ணின் அமுதூறி யோடில்
வினையிழந்தே வாழும் வகை யருளி
விரைந் தாடும் விரைகழல் காட்டு
இனிதே,
தமிழரசி.
சொல் விளக்கம்:
நினைவிழந்தே - நினைவை இழத்தல்
நேயம் - அன்பு
நின்பால் - உன்னிடம்
அரற்ற - உளறல்/ சொன்னதை மீண்டும் மீண்டும் சொல்லல்
உனைவிழைந்து - உன்னை விரும்பி
ஐயம் - நம்பிக்கை இன்மை
நினைநாடி - உன்னைநாடி
உவந்து - மகிழ்ந்து
உவகை - இன்பம்
கண்ணின் அமுது - கண்ணீர்
வினைஇழந்தே - முற்பிறவிப் பயனால் வரும் துன்பங்களை இழந்து
விரைந்தாடு - விரைவாக ஆடும்
விரைகழல் - நறுமணம் வீசும் திருவடி
No comments:
Post a Comment