பூங்கமலம் பூத்திடவும்
பூம்புனல் பெருகிடவும்
தேங்கமலத் தெளிதேறல்
தெள்ளமுதாய் ததும்பிடவும்
செங்கமலச் செய்யவளும்
செழிப்பையள்ளித் தந்திடவும்
பொங்கமலத் தாயவளும்
புங்கைமண்ணிற் புன்னகைப்பாள்
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
பூங்கமலம் - தாமரைப்பூ
பூம்புனல் - புது வெள்ளம்
தேங்கமலம் - தேனுள்ள தாமரை
தெளிதேறல் - தெளிந்த தேன்
தெள்ளமுதாய் - மாசற்ற அமுதம்
ததும்புதல் - நிறைந்து வழிதல்
செங்கமலம் - சிவந்த தாமரை
செய்யவள் - திருமகள்/இலக்குமி
பொங்கமலம் - பொற்கமலம்
தாயவளும் - இங்கே [கலைமகள்/சரஸ்வதி] குறிக்கிறது
புங்கைமண் - புங்குடுதீவு மண்
No comments:
Post a Comment